Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபைக் கூடி பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டிருந்தார்.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஆட்சி செய்யும் தேவை இல்லை என்ற போதிலும் காணப்படும் நிலைமயை கட்டுப்படுத்த அவசரகாலச்சட்டம் தேவைப்படுகிறது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில்இ அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டு வரும் மக்களின் எதிர்ப்பை அடக்க அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையில் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துவதாக எதிரணி அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …