Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தனது குறைபாட்டை கூறிய ரணில்

தனது குறைபாட்டை கூறிய ரணில்

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது தனது பெரும் குறைபாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளைப் பேசும் திறமை முக்கியமானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பேச முடியாமல் போவதால் யுத்த சூழ்நிலைக்கும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விசேட சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பிரதமர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மொழிப் பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்தக் காலத்தில் நாங்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை எனவும், அது தனது குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அப்போது தான் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், தமது ஊர் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு மொழியை மாத்திரமே கற்றுக் கொண்டதாகவும், பேசியதாகவும் தெரிவித்ததுடன் ஏனைய மொழிகளின் அவசியத்தையும் உணர்வதாக தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv