“சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது”: – ரணில் தெரிவிப்பு
சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றிப்பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுப்படி செய்யப்பட்ட மனுக்கள் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுச்செல்ல வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதே போன்று ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகியுள்ளது. அரசியலமைப்பை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் , பாராளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். எவ்வாறாயினும் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தேயாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய இல்லத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தேர்தல் திகதியை தீர்மானம் செய்ய சுகாதார தரப்பை திங்களன்று சந்திக்கிறது ஆணைக்குழு – மஹிந்த தேசப்பிரிய