Sunday , May 26 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரதமர் பதவியை துறக்க வேண்டும் ; இராஜதந்திரிகளும் அழுத்தம்

பிரதமர் பதவியை துறக்க வேண்டும் ; இராஜதந்திரிகளும் அழுத்தம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளால் நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி நகர்கிறது. அதனை கருத்திற் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய பிரதமர் ஒருவரை நியமித்து ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும்வரை நாட்டை ஸ்திரமாக கொண்டுசெல்லுமாறும் பிரதமருக்கு இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பேரரணையை ஒருவேளை எதிரணி வெற்றிக்கொள்ளும் பட்சத்தில் தேசிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அர்ப்பணிப்புகள் அனைத்து சிதைந்துவிடும். எனவே, தமது பதவியை மாத்திரம் கருத்திற் கொள்ளாது நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பிரதமர் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் இராஜதந்திரிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளததாக அறிய முடிகிறது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …