Monday , November 18 2024
Home / முக்கிய செய்திகள் / ரணிலுக்கு எதிரான பிரேரணை ; மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை எடுப்போம்

ரணிலுக்கு எதிரான பிரேரணை ; மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை எடுப்போம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார்.

பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும்இ அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் மாறாக அரசியல் அபிலாஷைகளை இலக்காக கொள்ளும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவதுஇ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஜே.வி.பி. தயாராகவுள்ளது. பிரதமர் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் – மோசடிகள்இ திருடர்களை பாதுகாத்தமைஇ மத்திய வங்கி பிணைமுறி மோசயுடன் தொடர்புப்பட்டுள்ளமைஇ ராஜபக்ஷர்களில் ஊழல்களுக்கு தண்டனை வழங்குவதில் இருந்து பாதுகாத்தமை உட்பட அவரின் ஆட்சியின் வினைதிறன்மைகளை காரணங்காட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவளிப்போம்.

மாறாக அவர் அவரின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாரில்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதிவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களுக்கு தேவையற்ற விடயமாகும் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv