Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீன- சிறிலங்கா சுதந்திர வர்த்தக வலய கட்டுமானமானது, இருதரப்பு வர்த்தகத்தில் நியாயமான மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான முக்கியமான தொடக்கப் புள்ளியாக இருக்கும். இது முதலீடுகளை எளிதாக்கும் என்றும் அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்தார் என்றும் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் தொடர்பாக இந்தியா தொடர்ந்து கரிசனைகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …