இராமநாதபுரம் – மாயவனூர் பகுதியில் மூன்று வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் தாயாரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – என்று இராமநாதபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
மாயவனூர்ப் பகுதியில் இருதினங்களுக்கு முன்னர் இரவுவேளையில் வீடுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஏழு பேர் கொண்ட குழு வீடுகளுக்குள் புகுந்து தாக்கியது. அங்கிருந்த பொருள் களை அடித்து நொறுக்கியது. வாழைத் தோட்டங்களையும் சேதமாக்கியது. பின்னர் தப்பிச்சென்றது.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணை களை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைதுசெய்தனர். அவ ரது தாயாரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். பொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்னி லைப்படுத்தப்பட்டனர். முதலாவது சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலிலும், அவரது தாயாரை ஏழு நாட்களுக்கு விளக்கமறிய லிலும் வைக்குமாறு நீதிவான் உத்த ரவிட்டார் – என்றார்