உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை மறுநாள் (11-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் பா.ஜ.க ஆட்சியமைத்தால் முதல்வர் வேட்பாளராக யார் வருவார்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்
உத்தர பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க திணறி வருவது குறிப்பிடத்தக்கது.