Wednesday , November 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உமாஓயா திட்டத்துக்கு விரைவில் தீர்வு : அரசு திட்டவட்டம்

உமாஓயா திட்டத்துக்கு விரைவில் தீர்வு : அரசு திட்டவட்டம்

உமாஓயா திட்டத்தை நிறுத்த முடியாது. 75வீதமான பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களுக்கு பாதுகாதுகாப்பான முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததாக அமையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இத்திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகளாவது,

 

• உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு பொருத்தமான இடங்களுக்கு அருகில் பாரியளவிலான 06 நிலக்கீழ் கிணறுகளை துரித கதியில் நிர்மாணித்தல்.

• இதுவரை நீர் தாங்கிகள் பெற்றுக் கொடுக்கப்படாத குடும்பங்களுக்கு அடுத்த இரு வார காலத்திற்குள் நீர்தாங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட செயன்முறையொன்றை செயற்படுத்தல்.

• நீர் பகிர்ந்தளிப்பு முறையினை மேலும் பலப்படுத்துவதற்காக உள்நாட்டலுகல்கள் அமைச்சின் கீழ் காணப்படும் 20 நீர் பவுசர்களை பதுளை மாவட்ட செயலாளருக்கு உடனடியாக விடுவித்தல்.

• பாதிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கான நட்ட ஈடு வழங்கும் செயன்முறையினை துரிதப்படுத்தல்.

• தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பிரிவொன்றினை ஸ்தாபித்து சேவையினை விஸ்தரித்தல்.

• பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பிரதேச வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாய்களை மாகாண சபைக்கு விடுவித்தல்.

• நிவாரண பணிகளை பலனுள்ள விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காக ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘ஜன சகன செயலகம்’ இனை மேலும் பலப்படுத்தல்.

• நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்கு ஒரு முறை மற்றும் மாதாந்தம் அறிக்கை சமர்பித்தல்.

• முன்மொழியப்பட்டுள்ள பண்டாரவெல நீர் யோசனை திட்டத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்காக 2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கிக் கொள்ளல்.

• பாதிக்கப்பட்டுள்ள சிறு குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக வேண்டி 100 மில்லியன் ரூபா நிதியினை ஓதுக்கிக் கொள்ளல்.

• மீள் குடியேறுவதற்காக இனங்காணப்பட்டுள்ள காணிகளின் உரிமைகளை பண்டாரவெல பிரதேச செயலாளரின் ஊடாக குறித்த குடும்பங்களுக்கு துரித கதியில் வழங்கல்.

• பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றினை துரித கதியில் திருத்தம் செய்து வழமையான நிலைமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளல்.

• பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வீட்டுக் கடன் மற்றும் பயிர்செய்கை கடன் தவனைகளை மீண்டும் செலுத்துவதற்காக இரு வருட சலுகை காலத்தை பெற்றுக் கொடுத்தல்.

• பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட மாற்று வாழ்வாதார அபிவிருத்தி திட்டமொன்றை துரித கதியில் தயாரித்தல்.

• சுரங்க மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள நீர் கசிவினை மூடிவிடுவதற்காக வேண்டி ஈரானின் கம்பனியின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளல்.

• வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை, சர்வதேச விசேட நிபுணர்களின் சிபார்சுகள் மற்றும் உள்நாட்டு விசேட நிபுணர்களின் குழுவின் மூலம் பெறப்பட்ட சிபார்சுகள் ஆகியவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு முன்னெடுத்தல் என்பனவாகும்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …