Thursday , November 21 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினி படிப்பறிவில்லாதவர்

ரஜினி படிப்பறிவில்லாதவர்

ரஜினி அரிசியலுக்கு வரப்போவதாக இன்று காலை அறிவித்திருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரஜினியைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார். அவரது அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் படிப்பறிவில்லாதவர் என்றும் ரஜினி அரசியலுக்கு வரும் விஷயத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துகின்றன என்றும் தமிழக மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv