Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யுத்த காலத்தில் அரசிற்கு எங்கிருந்து ஆயுதம் வந்தது? – மௌனம் கலைத்தார் கோட்டாபய

யுத்த காலத்தில் அரசிற்கு எங்கிருந்து ஆயுதம் வந்தது? – மௌனம் கலைத்தார் கோட்டாபய

யுத்த காலத்தில் அரசிற்கு எங்கிருந்து ஆயுதம் வந்தது? – மௌனம் கலைத்தார் கோட்டாபய

கடந்த யுத்த காலத்தில், இலங்கை ராணுவம் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள், எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்விக்கு, இதுவரை காலமும் உறுதியான பதில் கிடைக்காமல் இருந்த நிலையில், அதற்கான பதிலை, அப்போதைய பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றதாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், இந்திய, சீனாவிடையே எழுந்துள்ள முதலீட்டு போட்டிகள் குறித்து, ஊடகமொன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்திற்கு, இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது. ஆனால், தமிழ் நாட்டில் ஏற்பட்ட குழப்ப சூழல் காரணமாக ஆயுதங்களை வழங்கவில்லை. ஆகையால் இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு, முழுமையாக சீனாவின் ஆயுத கொள்வனவை நம்பி செயற்படும் நிலையே இருந்தது.

மேலும், பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பாரியளவில் ஆயுதங்களை வழங்கியதோடு, விமானப்படை தாக்குதல்களுக்கு உறுதுணையான விமானங்களை வழங்கி உதவின.

யுத்த காலத்தில் பெரும் உதவியும், நாட்டின் வீதி அபிவிருத்திக்கு முக்கிய பங்கு வகித்த சீனாவின் உதவியை மறந்து, இந்தியாவிற்கு நல்லாட்சி அரசானது முன்னுரிமை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …