கொழும்பிலும் வெடித்தது போராட்டம்!
சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பதில் கூறவேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும், இராணுத்தினர் வசப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஒருவாரகால தொடர் போராட்டம் கொழும்பில் இன்று ஆரம்பமானது.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாடில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமானது.
எதிர்வரும் 23ஆம் திகதிவரை கோட்டை ரயில் நிலையம் முன்பாகத் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.