Tuesday , June 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக அமைந்திருப்பதாக பெற்றோர்கள் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளையும் ஏனைய பல விடயங்களையும் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் இந்த விசேட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …