ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம்
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகார்த்தாவில் எதிர்வரும் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் 8ஆம் திகதி இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடா (துழமழ ஏனைழனய) அவர்கள் தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக
இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ.எம்.பசீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ஜோகோ விடோடா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்துக்காக விடுக்கப்பட்ட அழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விஜயத்தின்போது வர்த்தக முதலீடுகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இருதரப்பு உறவுகளைப் பேண எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதற்கும் இந்தோனேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.