Saturday , June 15 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை

அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை

அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை

பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தடை செய்கின்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு, சியாட்டல் நீதிபதி ஒருவர் அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதித்திருக்கிறார்,

டிரம்பின் நிர்வாக ஆணைக்கு சவால் விடுப்பதற்கு அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட முகாந்திரம் இல்லை என்று அரசு வழங்கறிஞர்கள் வாதிட்ட நிலையிலும், பெடரல் நீதிபதி ஜேம்ஸ் ரோபார்ட் இந்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு அளித்திருக்கிறார்,

இது வரை நடத்திய தொலைபேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது : டிரம்ப்
கடந்த வாரம் டிரம்ப் கொண்டுவந்துள்ள இந்த நிர்வாக ஆணைக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதோடு, அமெரிக்க விமான தளங்களில் குழப்பங்கள் நடைபெறவும் இந்த நிர்வாக ஆணை காரணமாகியது,

இதுவரை 60 ஆயிரம் விசாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.

டிரம்ப் நிர்வாகத்தைப் பாராட்டும் சௌதி அமைச்சர்:

டிரம்பின் இந்த நிர்வாக ஆணைக்கு அமெரிக்காவின் அகதிகளை அனுமதிக்கும் திட்டத்திற்கு 120 நாட்கள் தடைவிதிருத்திருக்கிறது.

சிரியாவிலிருந்து வருகின்ற அகதிகளுக்கு முழுமையான தடை உள்ளது. இராக், சிரியா, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமனில் இருந்து அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வோருக்கு விசா வழங்குவது 90 நாட்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் எல்லை கொள்கை: யாருக்கு பாதிப்பு?

டிரம்பின் நிர்வாக ஆணைக்கு எதிரான வழக்கு, தொடக்கத்தில் வாஷிங்டன் மாகாணம் தொடுத்தது. பின்னர் மின்னெசோட்டா மாகாணம் இதில் இணைந்து கொண்டது.
அட்டர்னி ஜெனரலின் பதவி நீக்கத்தை நியாயப்படுத்தும் டிரம்ப் அணி
மக்களை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரால் பாகுபடுத்துவதாக இந்த நிர்வாக ஆணை அமைகின்ற காரணத்தால், இந்த தடை சட்டபூர்வமற்றது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வாஷிங்டன் மாகாண அட்டர்னி ஜெனரல் பாப் ஃபர்குசன் விவரித்திருக்கிறார்.

இந்த தீர்ப்பு டிரம்பின் நிர்வாகத்திற்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. இதன்படி, தடைசெய்யப்பட்டிருக்கும் இந்த 7 நாடுகளில் இருந்தும் மக்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பொருள்படுவதாக வாஷிங்டன் டிசியில் இருக்கின்ற பிபிசியின் டேவிட் வில்லிஸ் தெரிவிக்கிறார்,

நீதிபதி நியமனம்- விரைவாக ஒப்புதல் வழங்குமாறு டிரம்ப் வலியுறுத்தல்
இந்த தீர்ப்புக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடியும்.
அமெரிக்காவை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டு தன்னுடைய வழிகாட்டு நெறிகள் அமைந்திருப்பதாக அதிபர் டிரம்ப் வாதிடுகிறார்.

இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிய டிரம்ப் நிர்வாகம் காரணமா?
“சிறந்த பாதுகாப்பான கொள்கைகள்” உருவாக்கப்பட்டவுடன் விசாக்கள் மீண்டும் வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கும் அதிபர் டிரம்ப், இது முஸ்லீம்களுக்கான தடை என்பதை மறுத்திருக்கிறார்,

பல அட்டர்னி ஜெனரல்கள் டிரம்பின் இந்த நிர்வாக ஆணை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

விசா வைத்திருப்போரை நாடு கடத்துவதற்கு பல பெடரல் நீதிபதிகள் தற்காலிகமாக தடை செய்துள்ளனர். ஆனால் சியாட்டல் நீதிமன்ற தீர்ப்புதான் அமெரிக்கா முழுவதும் பொருந்துகின்ற ஒன்றாக வந்துள்ளது.

‘முஸ்லீம் பயணத்தடை’: நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

டிரம்பின் இந்த நிர்வாக ஆணைக்கு எதிரான வழக்குகளை வர்ஜீனியா, நியூ யார்க், மசாச்சூசெட்ஸ் மற்றும் மிச்சிகன் என குறைந்தது 4 மாகாணங்கள் நடத்தி வருகின்றன.
அமெரிக்கவுக்கு வருவதற்கு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவரை தடுத்து வைப்பது அல்லது நீக்கி விடுவதை தடுக்கின்ற தற்காலிக தடை காலத்தை நீட்டிக்க வெள்ளிக்கிழமை காலையில் பாஸ்டனிலுள்ள நீதிபதி ஒருவர் மறுத்துவிட்டார்.

வலிமையான அமெரிக்க எல்லைக்காக தடை நடவடிக்கை – டிரம்ப்

மசாச்சூசெட்ஸக்கு மட்டுமே பொருந்துகின்ற இந்த தடையின் காலக்கெடு பிப்ரவரி 5 ஆம் நாள் முடிவடையவுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …