Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!

போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!

போதைப் பொருளுக்கு எதிராக, சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

”போதைப் பொருள்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் தடுப்புப்பிரிவினர் இணைந்து போதைப் பொருளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸாரால், நாவற்குழி பகுதியில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றுக்கு இன்று காலை முதல் விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …