Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அம்பலந்தோட்டை, கொக்கல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தப் போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம்அணியாமல் இருவர் பயணித்ததுடன், அவர்களை தொடர்ந்து சிறிய ரக பாரவூர்தியும் பொலிஸாரின் சமிஞைகளை மீறி பயணித்துள்ளது.

மேலும், குறித்த பாரவூர்தி பொலிஸாரின் சோதனை சாவடியின் பக்கமாக திருப்பப்பட்டு, பொலிஸாரை பயமுறுத்தும் வகையில் சென்றதுடன், அவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டனர்.

இதனால் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியப்போது ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸாரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சமிஞைகளை மீறிச்சென்ற பாரவூர்தியின் சாரதியும், அதில் பயணித்த மற்றைய நபரும் பொலிஸில் இன்று(11) காலை சரணடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …