Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்

கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்

கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்

சிலாபம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பங்­க­தெ­னிய, பள்­ளம பிர­தே­சத்தைச் சேர்ந்த 15 வய­து­டைய பாட­சாலை மாண­வியைக் கடத்திச் சென்று ஆராச்­சிக்­கட்டு பிர­தேச வீடு ஒன்றில் பல நாட்கள் தடுத்து வைத்­தி­ருந்த இளைஞர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்­தினம் குறித்த இளைஞரை கைதுசெய்ததாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

வென்­னப்­புவ சிரி­கம்­பள பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய இளை­ஞரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டுள்ளார்.

கைதான குறித்த இளைஞர் பொய்­யான வார்த்­தை­களைக் கூறி தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்­தி­ருந்­த­தாக மாணவி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இம்­மா­ணவி காணாமல் போனமை தொடர்பில் அவ­ரது பெற்றோர் சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ர­ணை­யினை மேற்­கொண்ட, பொலிஸார் சந்­தே­கத்தில் குறித்த இளை­ஞரைக் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது காணாமல் போன மாண­வியை தானே கடத்திச் சென்­ற­தா­கவும், அம்­மா­ணவி தனது விருப்­பத்­து­ட­னேயே தன்­னுடன் வந்­த­தா­கவும், தாம் இரு­வரும் ஆராச்­சிக்­கட்டு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நண்பர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் இளைஞர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இதனையடுத்து மாணவியை மீட்ட பொலிஸார் பாதிக்­கப்­பட்ட மாண­வியை வைத்­திய பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனுமதித்துள்ளதுடன், சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv