வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, சியபலாண்டுவ பகுதியில் தங்கியிருந்த 22 இலங்கையர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில், வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் பின்னரே, இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆள்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு சந்தேக நபர்கள், திஸ்ஸமஹாராம – பன்னேகமவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.