கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி இன்று திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு வகை காய்ச்சல் பரவுவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக சுமார் 500 மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியுள்ளனர் என்று துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தால், பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனப் பேராதனைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.