இப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், டிபாசிட் பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார், அவர். சினிமாவாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன் வீட்டுப் பீரோவை நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளார்.
தற்போது காட்டேரி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில், பிரபல கன்னட நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா, ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அணைத்து பிரபலங்களையும் பேட்டி எடுக்கும் பத்திரிகை ஓவியாவை பேட்டி எடுக்கமுடியவில்லை.
ஓவியா பெரிய இடத்தை பிடித்துவிட்டார் என்பது தான் உண்மை.