Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி

மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து கடந்த மாநகர சபைத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியிருந்தால் இன்று தான் கடுவெல மாநகர சபையின் மேயராக இருந்திருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv