Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!

ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!

ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கும்பகோணத்தில் ஒஎன்ஜிசி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது, ஓஎன்ஜிசி மீது தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டல்தான் நாடு முழுமையாக வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்கள் தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி வருவதாக கூறினார்.

திட்டம் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றப்படும் என்றும் மக்களுக்கு எந்த பாதிப்பு இதனால் ஏற்படாது என்று தெரிவித்தார்.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …