ரயில் குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் மற்றும் வடக்கு ரயில் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இலங்கையின் ரயில் வீதி பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்களாகும். அத்தோடு இதில் 1337 குறுக்கு ரயில் பாதை உண்டு. இவற்றில் 520 ரயில் குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலும் 400 ரயில் குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் எஞ்சியுள்ள ரயில் குறுக்கு பாதைகளை உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கான திட்டம் ஹங்கேரிய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ரயில் பயணத்திற்கான நேரத்தை 40 நிமிடங்களாக குறைக்கும் வகையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு ரயில் பாதையில் ரயில் பயணிக்கக்கூடிய வகையில் மாஹோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்ட்டுள்ளது.
கொல்காவலையில் இருந்து குருநாகல் வரையில் இரண்டை ரயில் பாதையை அமைக்க சமிஞ்சை கட்டமைப்பபை பொருத்துவதற்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.