Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது.

டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை:

இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் சக்தியுடையது என்றும், இதற்கு புதிய திட எரிபொருள் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது என்றும் வட கொரியா தெரிவித்திருக்கிறது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை சர்வதேச நாடுகளின் கண்டனத்தை பெற்றிருக்கிறது.

வட கொரியா மீதான தடைகளை மேலும் கடுமையாக்கியது ஐ.நா.:

வட கொரியாவால் அதிகரித்து வருகின்ற பகைமையை தடுக்க, அதிபர் டிரம்ப் பசிபிக் பிராந்திய நாடுகளுடனான கூட்டணியை மீண்டும் செயல்படுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கின்றது.

வட கொரியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தகவல்

இந்த ஏவுகணை ஏறக்குறைய 500 கிலோமீட்டர் சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.

வட கொரியா இந்த ஏவுகணையை செங்குத்தாக செலுத்தியிருப்பதாக தென் கொரியா கூறுவதால், இது இன்னும் அதிக தூரம் சென்று தாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
சர்வதேச தடைகளின்போது, வட கொரியாவை தூக்கி நிறுத்திய நிழலுலகச் சந்தை
அணு ஆயுதத்தை கொண்டு செல்லக்கூடிய ஏவுகணையை வடிவமைப்பதில் வட கொரியா இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …