நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் சபையின் வாசகம் அடங்கிய வரவேற்பு வளைவு அமைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நல்லூர்ப் பிரதேச சபையின் அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் குறித்த பிரேரணையை தவிசாளர் முன்மொழிந்தார்.
பிரேரணையில் தெரிவித்தாவது:
சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வரவேற்பு வளைவுகளை நிறுவத் தீர்மானித்துள்ளோம். அதைப் பிரேரணையாக இந்தச் சபையில் முன்மொழிகின்றேன். இதை உறுப்பினர்கள் அங்கீகரித்தால் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும்.
இவ்வாறு வளைவுகளை அமைப்பதன் ஊடாக நாம் எமது சபையின் எல்லைப்பகுதியை மக்களுக்கு தெளிவு படுத்துவதுடன். வீதியால் பயணிப்பவர்களும் வாசகங்களை வாசிப்பதனால் மகிழ்வர் – என்றார்.
இந்தப் பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை வழங்க ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.