அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு
ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீதிபதியும், நீதிமன்ற அமைப்பும்தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று , பயணத் தடையை உடனடியாக மீண்டும் கொண்டுவர அமெரிக்க அரசால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது.
நீதித்துறை, திங்கள் மதியம் வரை தனது பதிலை தாக்கல் செய்யலாம்.