முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன்
முஸ்லிம் மக்களின் உரிமை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் தொடரும்.
மேற்படி முடிவை மீள்பரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் மத உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.