Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முள்ளிக்குளம் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவுகள்

முள்ளிக்குளம் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவுகள்

மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் – விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த போராட்டம் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் 350 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன், மலங்காடு என்னும் காட்டு பிரதேசத்தில் 176 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி குடியமர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், மலங்காடு பிரதேசத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் காயாக்குழி என்னும் இடத்தில் 92 குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.

யுத்தகாலத்தில் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் தமது காணிகள் விடுவிக்கப்பட்டால் நாடுதிரும்புவோம் எனவும், தமது காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் தாயகம் திரும்பும் தாம் அங்கு குடியமர்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளைஇ முள்ளிக்குளம் பாடசாலை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்துடன், அந்த கிராமத்தைச் சேரந்த மாணவர்கள் கடற்படையினரின் பேரூந்தில் பாடசாலைக்கு சென்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …