Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சாட்சியை கோரும் இராணுவம்; உறவுகள் கவலை

சாட்சியை கோரும் இராணுவம்; உறவுகள் கவலை

இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் போராட்டம் இன்றுடன் இருபத்தோராவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எந்தவொரு தீர்வுமின்றி போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …