தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ?
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி வவுனியாவில் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் சளைக்காமல் தொடர்கின்றது.
நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் இறங்கிக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
“ஜ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் துரோகம் இழைக்காதே!”, “கடத்தியவர்களைக் காப்பாற்றவா காலநீடிப்பு?”, “தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன?” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு கதறி அழுதவாறு அவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரட்டக் களத்துக்குச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம. தியாகராசா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.

