Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய டிக்கென் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் விசேட அழைப்பினர்களுக்கான இராப் போசனத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள கடல்சார் பயங்கரவாதம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கடல்சார் பயங்கரவாதம் முடிவுற்று வர்த்தக கப்பல்கலை கடத்தும் கடல்சார் பயங்கரவாதம் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு இந்து சமுத்திரத்தை அமைதியான வலயமாக உருவாக்குவதற்கு சிறந்த பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கென இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் மற்றும் பிரதான கடல்சார் நிறுவனங்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் யோசனையை தான் முன்வைப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …