மோடி இலங்கை வருகை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




