ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் சித்தியடைந்து எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாழ்த்தியுள்ளார்.
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
இம்முறை 5ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங் களில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 விண்ணப்பதாரி கள் தோற்றவுள்ளனர். பரீட்சை சட்டதிட்டங்க
ளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை சட்டத்தினை மதித்து அனைத்துப் பரீட்சாத்திகளும் செயற்பட வேண்டும். உரிய நேரத்தில் மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – என்றார்.