பால்மா ஒரு கிலோ 75 ரூபாவாலும், சமையல் எரிவாயு 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவருகிறது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும்படி வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடமும், பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் அனுமதி கோரியிருந்தது.
ஒருகிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் காஸ்விலை சிலிண்டரொன்றுக்கு 275 ரூபாவாலும் அதிகரிக்கும் படி அந்த நிறுவனங்கள் பாவனையாளர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
தற்போது 12.5 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரொன்று ஆயிரத்து 431 ரூபாவாகவும் பால்மா கிலோ வொன்று 810 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்படத்தக்கது.