Tuesday , December 3 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கடந்த 31-ம் தேதி நடைபயணம் தொடங்கினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மதிமுக தொண்டர்கள் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv