மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் அனுமதியின்றித் தறிக்கப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகன புரம் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவதினம் அங்கு சென்ற பொலிஸார் தறிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றினர். சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை நீதிமன்றில் பாரப்படுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – எனத் தெரிவிக்கப்பட்டது.