Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்

மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு

வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மே 18ஆம் திகதி முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இதன் பின்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி வருகை தந்தால் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த எதிர்ப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …