இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி உள்ளிட்ட பல வெளிநாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பின்னர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சுமூக தீர்வு காண்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமை தமிழர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.