பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள்.
அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை.
எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த பிளவு மேலும் வலுவடையும். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை மீண்டும் பிரிக்க முற்படுகின்றனர்.
மறுபுறம் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் போதைப்பொருள் கைதுகள் காணப்படுகின்றன.
குணசிங்கப்புர – பூர்வாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.