கோத்தபாய ராஜபக்ஷவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது பொறுப்புகளை கைவிட்டு விட்டு நாட்டைவிட்டு ஒரு போதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷவை தோற்கடிக்கும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்த நாட்டிலிருந்து தப்பியோடி இன்னொரு நாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டவராகவும் ஐக்கிய தேசிய கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவராகவும் காணப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்கு வருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை, அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை, தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தி னேன் என்பதை உணரவில்லை, தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடைய வில்லை, எனவும் மங்கள சமரவீர தெரிவித் துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை குறித்தும் லசந்த விக்கிரம துங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ஷ கவலைப்படவில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.