ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அந்த கட்சி பிளவுபடும் நிலையில் இருந்த போதும் தற்போது வரை உடையாமல் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.