Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போர்க்குற்ற விசாரணை விவகாரம்: மைத்திரியின் கருத்துக்கு வியாழனன்று சபையில் சம்பந்தன் தக்க பதிலடி!

போர்க்குற்ற விசாரணை விவகாரம்: மைத்திரியின் கருத்துக்கு வியாழனன்று சபையில் சம்பந்தன் தக்க பதிலடி!

“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு முரணாக குறிப்பாக போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும்.”

– இவ்வாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எந்தவொரு படைவீரரையும் நீதிமன்றில் நிறுத்துவதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் அரசின் அமைச்சர்களும், போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று அதன் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“ஐ.நா. தீர்மானத்துக்கு முரணாக அரச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்குரிய பதிலை வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜெனிவா விவகாரம் தொடர்பான அமர்வில் வழங்குவேன்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …