Sunday , November 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து

புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புட்டினின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும. அதன்மூலம் ரஷ்ய மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, புட்டினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்ற ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …