தேர்தல் திகதியை தீர்மானம் செய்ய சுகாதார தரப்பை திங்களன்று சந்திக்கிறது ஆணைக்குழு – மஹிந்த தேசப்பிரிய
9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் திகதியை தீர்மானம் செய்வதற்காக எதிர்வரும் திங்களன்று தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக சுகாதார துறையினருடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்கவுள்ளது. தேர்தலை நடத்துவதற்குரிய உகந்தநிலைமைகள் காணப்படுகின்றமையை உறுதிசெய்வது பற்றியும், தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய மேலதிக பாதுகாப்பு முறைகள் பற்றியும் விரிவாக இதன்போது பேசப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச்சந்திப்பில் சுகாதாரதுறையினரின் கொரோனா பாதுகாப்பு தொடர்பிலான உத்தரவாதங்களையும் ஆணைக்குழு உறுப்பினர்கள் கோரவுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, நாளை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகையை தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ஒத்திகையின் அனுபவத்துடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை திங்கட்கிழமை பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




