Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!

மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!

வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.

பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த அதிரடி முடிவுகளின் பிரதிபலனாக அம்மாகாண சபைகளில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. அத்துடன் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர்.

வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள் என்பதால் அந்த மூன்று மாகாண சபைகளின் அதிகாரத்தையும் கைப்பற்ற பொது எதிரணிக்குச் சிறந்த வாய்ப்பு இருக்கின்றது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …