Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!

சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன வலியுறுத்தினார்.

2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்­பிக்­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­காரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து கருத்துக்கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே குற்­றத்­திற்­கான முழு­மை­யான பொறுப்­பையும் ஏற்­று­கொள்ள வேண்டும் என்­பதை நாங்கள் தொடர்ச்­சி­யாக கூறி வந்தோம். இப்­போதும் நாங்கள் அதே நிலைப்­பாட்டில் இருந்தே கருத்து வெளி­யி­டு­கின்றோம். ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு 50 நாட்­க­ளுக்குள் மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற பாரிய நிதி மோசடி விவ­கா­ரத்தில் உண்­மை­களை மூடி மறைக்க பல சதித்­திட்­டங்கள் இடம்­பெற்­றன.

எனினும் கோப் குழுவின் செயற்­பா­டு­களின் பின்னர் ஜனா­தி­பதி மூல­மாக அமைக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­குழு மூல­மாக அவை தடுக்­கப்­பட்டு இப்­போது ஒரு முடிவு எட்­டப்­பட்­டுள்­ளது. விசா­ரணை ஆணைக்­குழு தமது அறிக்­கை­யினை ஜனா­தி­ப­திக்கு வழங்­கி­ய­துடன் நிறுத்­தி­விடக் கூடாது. அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஏனைய ஊழல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் நபர்கள் இந்த விட­யத்தில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்­திய வங்­கியில் மேற்­கொண்ட கொள்ளை சாதா­ரண விடயம் அல்ல. இது மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டித்த மிகப்­பெ­ரிய தேசத்­து­ரோக செய­லாகும். ஆகவே சட்­டத்தின் அதி­யுச்ச தண்­ட­னை­யினை குறித்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு வழங்க வேண்டும்.

ஜனா­தி­பதி தனது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி மத்­திய வங்கி ஊழல் வாதி­க­ளையும் அவர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சகல தரப்­பையும் தண்­டிக்க வேண்டும். இல்­லையேல் இந்த நாட்டு மக்கள் ஜனா­தி­ப­திக்கு கொடுத்த மக்கள் வரத்தை அவரே மீறியதாக அமையும்.

2015 ஆம் ஆண்டு தேர்­தலின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்­டினை புதிய அர­சாங்­கத்­திற்கு ஒப்­ப­டைத்த போது இந்த நாடு பூரண அபி­வி­ருத்தி கண்ட நாடக இருந்­தது.

எனினும் இன்று இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் நாட்டின் நிலை­மைகள் முழு­மை­யாக மாற்றம் கண்­டுள்­ளன. அன்று எமது ஆட்­சியில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அபி­வி­ருத்­திகள் அனைத்தும் இன்று நிறுத்­தப்­பட்­டுள்­ளன, வேலைத்­திட்­டங்­களை கைவிட்­டுள்­ளனர், கிரா­மங்கள் அழிந்து வரு­கின்­றன. விவ­சா­யி­களின் வாழ்­வா­தாரம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த அர­சாங்கம் நாட்­டினை முழு­மை­யாக சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் கைக­ளில் ஒப்­ப­டைத்து எமது வழங்­களை சூறை­யாடும் நிலை­மை­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்­திய வங்­கியில் கொள்­ளை­ய­டித்து. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் நகர்­வு­க­ளுக்கு மத்­திய வங்­கியின் கொள்­ளை­ய­டித்த நிதியே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல செயற்­பா­டு­களும் அர்ஜுன் மஹேந்­திரன் கொள்­ளை­ய­டித்த நி­தியில் இருந்தே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

ராஜபக் ஷக்­களின் ஆட்­சியில் கொள்­ளை­ய­டித்­த­தாக கூறி­னார்கள், தாங்கள் தூய்­மை­யான அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­தனர்.

ஆனால் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமே மிகவும் மோச­மான கொள்­ளைக்­கார ஆட்­சி­யாக மாற்றம் கண்­டுள்­ளது. எம்மை குற்­ற­வா­ளிகள் என கூறி­ய­வர்கள் இன்­று­வரை அவற்றை நிரூ­பிக்க முடி­யாத நிலையில் உள்­ளனர்.

எமது ஆட்­சியில் குற்­றங்கள் இடம்­பெற்­ற­வில்லை என கூற­வில்லை, எனினும் ஒரு­சிலர் செய்த குற்­றங்கள் கார­ண­மாக பொறுப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­று­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

மஹிந்த ராஜபக் ஷவை தண்­டிக்­கவே எமது மக்­களும் வாக்­க­ளித்­தனர். எனினும் நாட்­டுக்கு தகு­தி­யான தலைவர் மஹிந்த ராஜபக் ஷதான் என்­பதை அவர் ஆட்­சியில் இல்­லாத போதே மக்கள் விளங்­கிக்­கொண்­டனர்.

ஆகவே இப்­போது நாம் ஆரம்­பித்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றியில் இருந்து நாம் மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிரதமராக்கும் எமது பயணத்தை ஆரம்பிப்போம். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே.

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான போராட்டமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv