Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் 4 – மாஞ்சோலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், தெற்கிலே அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக வலியுறுத்தினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், காணாமல்போனவர்கள் வெளிநாட்டில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்தை கண்டிப்பதாகவும், முதலில் அவர்கள் காணாமற்போனவர்கள் அல்லவெனவும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்வர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் மாத்திரமல்ல எனவும் இந்த நாட்டை ஆண்டவர்கள் எனவும் அதனை இனவாதிகளுக்கு வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …