Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ – மஹிந்த ராஜபக்ஷ

‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ – மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய இராணுவத்தினரை ஒருபோதும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …