Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே! – பான் கீ மூனை அழைத்துவந்து இணங்கியவர் அவரே என்கிறார் பொன்சேகா

சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே! – பான் கீ மூனை அழைத்துவந்து இணங்கியவர் அவரே என்கிறார் பொன்சேகா

“போர் முடிந்த சூட்டோடு முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூனை இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த இணங்கிய மஹிந்த, இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பதாக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.”

– இவ்வாறு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“போக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச கருத்துக்கள் வலுவடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வாரங்களில் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூனை இலங்கைக்கு வரவழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படும் என்று உடன்படிக்கையை மஹிந்த கைச்சாத்திட்டிருந்தார்.

அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. அந்தத் தருணத்தில் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக் கொடுத்தது மஹிந்த ராஜபக்ஷதான். அவர் தற்போது இராணுவத்தினர் தொடர்பில் முதலைக் கண்ணீர் வடித்து வருகின்றார்.

இராணுவத்தினரில் ஒருவரையாவது சிறையில் அடைத்தால் கண்ணீர் விடுகின்றார். அன்று இராணுவத் தளபதியை (சரத் பொன்சேகா) சிறையில் அடைத்ததை அவர் மறந்துவிட்டார் . பிரிகேடியர்கள், கேணல்கள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர் என்று பலரையும் அன்று மஹிந்த சிறையில் அடைத்திருந்தார். இராணுவத்தினருக்குச் செய்த கொடுமைகள் காரணமாக சிலர் மாரடைப்பு வந்தும் இறந்துபோயிருந்தனர். தற்போது அவர் ஏதோ புனிதராகிவிட்டார் போல் பேச முற்படுகின்றார்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …